ஆன்மிக களஞ்சியம்

தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடுவது ஏன்?

Published On 2023-12-08 12:05 GMT   |   Update On 2023-12-08 12:05 GMT
  • நம்மை சிறப்புற இம்மையிலும், மறுமையிலும் உள்ள வாழ்க்கைக்கு தயார் செய்கிறார்கள்.
  • இந்த காலகட்டத்திலாவது நதியை மாசுபடுத்தாதீர்கள்.

தாமிரபரணி ஆற்றில் நடக்கும் இந்த நிகழ்வில் நாம் ஏன் தீர்த்தம் ஆட வேண்டும் நாம் ஏன் பூஜைகள்

வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் இருக்கும்.,

ஆனாலும் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று சிலரும் புராண இதிகாச கதைகளை

மேற்கோள்காட்டி சிலரும் கலந்து கொள்வார்கள்.

அதைவிட உண்மை நிகழ்வுகளை நன்கு புரிந்துகொண்டு செயல்படுவது என்பது மேன்மையுடையதாக இருக்கும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களின் தொகுப்பே இப்பிரபஞ்சம்.

அதுபோலவே ஐந்து பூதங்களின் கலப்பினால் நம் உடல் உருவாகி இருக்கிறது எனவே தான் சித்தர்கள் அண்டத்தில்

உள்ளது பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது எனும் ஒரு விளக்கத்தை சொல்லி இருக்கிறார்கள்.

காரணம் என்னவென்றால் பஞ்சபூதங்களான இவை ஐந்தும் நம் உடலுக்குள் உள்ள முக்கிய உறுப்புகளுடன் தொடர்புகொண்டது

உதாரணமாக நீர் பூதம் சிறுநீரகம் சிறுநீர் பை கர்ப்பப்பை விதைப்பை ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு உள்ளது

மேலும் எலும்புகள் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நீர்ச்சத்து குறைவே காரணம்

இப்படி ஒரு தொடர்பு உள்ள நம் உறுப்புகள் பலவீனம் அடைவதும் பாதிப்புகள் அடைவதும் நாம் பஞ்சபூதங்களில்

ஒன்றான நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதாலும் அதை போற்றி பாதுகாக்காமல் இருப்பதாலும் மேற்கண்ட

தோஷத்தினால் உறுப்புகள் பாதிப்படையும்.

நீர் பூதம் உறுப்புகள் தோஷம் நீங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் நாம் வசிக்கும் பகுதியில் உள்ள

நீர் நிலைகளையும் அதை சார்ந்த பகுதிகளையும் பராமரித்து சுத்தமாகவும் வைத்திருத்தலே

நாம் நம் நீர் பூத உறுப்புகளை பாதுகாக்கும் வழிமுறையாகும்.

இது உடல் சார்ந்த தொடர்பு அது மட்டுமல்ல நம் மனதிற்கும் பஞ்சபூதங்களுக்கும் தொடர்பு உண்டு.

நீரை நாம் அசுத்தப்படுத்தினால் நம் மனதில் பயம் கூச்சம் தாழ்வுமனப்பான்மை போன்ற

எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் இது மனதில் ஏற்படும் மாற்றங்கள்.

மேலும் ஆன்ம ரீதியாக ஐம்பூதங்களை நாம் வணங்கி பாதுகாத்து வந்தால் அதன் பொருட்டு ஆண்மை தெளிவும் உறுதியும் ஏற்படும் என்பது சித்தர்களின் தெளிவு.

ஆகவே மனம், உடல் ஆன்மா இவை அனைத்திற்கும் நாம் செய்யும் இத்தகைய செயல்கள் நம்மை

மேன்மை அடைய வைக்கும் ஆகவேதான் சித்தர்கள் பஞ்சபூதத்திற்கான விழாவை நமக்கு கொடுத்து

நம்மை சிறப்புற இம்மையிலும், மறுமையிலும் உள்ள வாழ்க்கைக்கு தயார் செய்கிறார்கள்.

நவகோள்களில் ஒன்றான குரு பெயர்ச்சி அன்று தன் ஆற்றலை இந்நதியின் மூலக்கூறுகளுடன் கலந்து

நீரின் மூலக்கூறு சக்தியை பன்மடங்காக்கும் நிகழ்வுதான் இது.

இப்படி ஓர் அரிய நிகழ்வு நாம் வாழும் காலத்தில் கிடைத்திருக்கிறது.

அந்த சக்தி அடைந்த மூலக்கூறுகள் கொண்ட இந் நதியின் நீர் நம் உடலையும் மனதையும் தோஷம் நீக்கி

புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

குரு கோளின் அதீத தெய்வ சக்தி அடைந்த இந்நதியை கோவிலின் கருவறையாகவே கருதவேண்டும்.

இந்த காலகட்டத்திலாவது நதியை மாசுபடுத்தாதீர்கள்.

நதியின் தூய்மை மற்றும் தெய்வீகத்தை காக்கும் பணியில் உறுதுணையாக நின்றவர்கள் கோவில் கும்பாபிஷேகம் செய்த பலனை அடைவார்கள்.

Tags:    

Similar News