ஆன்மிக களஞ்சியம்

பதினாறு கைகளுடன் அபூர்வ நரசிம்மர்

Published On 2023-12-13 11:31 GMT   |   Update On 2023-12-13 11:31 GMT
  • ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.
  • இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே அபூர்வமாக இரண்டு இடங்களில் தான் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சி அளிக்கிறார்.

அந்த இரு சேத்திரங்களுள் ஒன்று சிங்கர்கோவில் மற்றொன்று ராஜஸ்தானில் உள்ளது.

மூர்த்தியின் கைகளில் காணப்படும் ஆயுதங்களும் அவற்றின் நிலைகளும்:

பதாகஸ்தம், ப்ரயோக சக்ரம், ஷீரிகை என்னும் குத்துக்கத்தி, பாணம், ராட்சனின் தலையை அறுத்தல், கத்தியால் அசூரன் ஒருவனைக் கொல்லுதல், இரணியனின் கைகளில், குடல் மாலையைப் பிடித்திருப்பது, சங்கம், வில், கதை, கேடயம்,வெட்டப்பட்ட தலை, இரணியனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது.

மூலாயத்தில் பெரிய வடிவில் பதினாறு கைகளுடன் இரணியனைச் சங்கரிப்பவராகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

கீழே இடப்புறம் இரணியனின் மனைவியான நீலாவதி, கீழே வலப்புறம் மூன்று அசூரர்கள், பிரகலாதர்,

சுக்கிரர் வஷிட்டர் ஆகியவர்கள் இருக்கிறார்கள்.

வடக்கு நோக்கியவர்களாகச் சிறிய வடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் என இருவர் இருக்கிறார்கள்.

ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.

இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.

திரு.ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பில் இருந்து பிரெஞ்சு அரசாங்கம் நரசிம்ம சுவாமிக்கு

அவிசுப்பாக்கத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் செய்து வந்ததாகத் தெரிகிறது.

Tags:    

Similar News