ஆன்மிக களஞ்சியம்

நதிகளில் தோன்றி குருவுக்கு காட்சி தரும் புஷ்கர கங்கை

Published On 2023-10-07 12:45 GMT   |   Update On 2023-10-07 12:46 GMT
  • புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.
  • முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

தன்னை நோக்கி தவம் செய்த நவக்கிரக குருவுக்கு அருள் செய்ய நினைத்த பிரம்மன்,

தன் கமண்டலத்திலிருந்து வந்த புஷ்கர கங்கையைப் பார்த்து, "நீ குருவுடன் சென்றுவிடு" என்று கட்டளையிட்டார்.

புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.

அதோடு குருவுடன் செல்ல கங்கைக்கு விருப்பமும் இல்லை.

இதையடுத்து பிரம்மன், கங்கை, குரு ஆகிய மூவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு உறுதியானது.

குரு ஒரு ராசியில் ஒரு வருடம் இருப்பார்.

ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு நதியில் புஷ்கர கங்கை தோன்றி

குருவுக்கு காட்சி தர வேண்டும் என்ற உடன்படிக்கை ஏற்பட்டது.

அதற்கு புஷ்கர கங்கை ஒப்புக்கொண்டது.

இந்த ஏற்பாட்டின்படி,

குரு மேஷ ராசியில் இருக்கும் சித்திரை மாதத்தில் கங்கையிலும்,

குரு ரிஷப ராசியில் இருக்கும் வைகாசி மாதத்தில் நர்மதையிலும்,

குரு மிதுன ராசியில் இருக்கும் ஆனி மாதத்தில் சரஸ்வதியிலும்,

குரு கடக ராசியில் இருக்கும் ஆடி மாதத்தில் யமுனையிலும்,

குரு சிம்ம ராசியில் இருக்கும் ஆவணி மாதத்தில் கோதாவரியிலும்,

குரு கன்னி ராசியில் இருக்கும் புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணாவிலும்,

குரு துலாம் ராசியில் இருக்கும் ஐப்பசி மாதத்தில் காவிரியிலும்,

குரு விருச்சிக ராசியில் இருக்கும் கார்த்திகை மாதத்தில் தாமிரபரணியிலும்,

குரு தனுசு ராசியில் இருக்கும் மார்கழி மாதத்தில் சிந்துவிலும்,

குரு மகர ராசியில் இருக்கும் தை மாதத்தில் துங்கபத்ராவிலும்,

குரு கும்ப ராசியில் இருக்கும் மாசி மாதத்தில் பிரம்மபுத்ராவிலும்,

குரு மீன ராசியில் இருக்கும் பங்குனி மாதத்தில் பிரநீதாவிலும்,

புனித நீராடலுக்கு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நாட்களில் சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

Tags:    

Similar News