ஆன்மிக களஞ்சியம்

முருகன் பூஜித்த சிவலிங்கம்

Published On 2024-04-23 10:47 GMT   |   Update On 2024-04-23 10:47 GMT
  • தர்மத்தை நிலைநாட்ட வடிவம் கொண்டவன் முருகன்.
  • முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.

முருகன் என்றால் அழகன் என்று பொருள். ஓம் என்ற பிரணவத்தின் வடிவமாக நின்றவன் முருகன்.

தர்மத்தை நிலைநாட்ட வடிவம் கொண்டவன் முருகன்.

முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.

முருகனை பூஜிப்பதற்கு சிறப்பு பெற்ற தலங்கள் அறுபடை வீடுகள்.

முருகனை பூஜிப்பதால் சிறப்பு பெற்ற தலங்கள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவிடைக்கழி.

இங்கு முருகப் பெருமானுக்கு பின்புறம் சிவலிங்கம் உள்ளது.

(குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அதுபோல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மையுண்டாகும்.

கந்த புராணத்தில் வரும் சுப்ரமண்ய தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும்.

பாவங்கள் விலகி சகல விதமான நன்மையும், இறுதியில் மோட்சமும் கிடைக்கும்.

செவ்வாய் தோஷமுடையவர்கள் இதை படிக்க மிகவும் நன்மை பயக்கும்.

Tags:    

Similar News