ஆன்மிக களஞ்சியம்

காமாட்சி அம்மன் கோவில் கட்டமைப்பு

Published On 2023-09-25 10:28 GMT   |   Update On 2023-09-25 10:28 GMT
  • ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.
  • பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.

மாங்காடு தலத்தில் கோவிலிலின் கோபுர வாசலைக் கடந்து, உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது.

வினைதீர்க்கும் விநாயகரை வணங்கி விட்டு உள்ளே சென்றால் முருகக் கடவுளையும், ஆதிசங்கரரையும் வணங்கலாம்.

சூரியன், பைரவர், மேலும் ஒரு விநாயகரைத் தரிசித்தபின் துவார பாலகர் நின்றிருக்கும் வழியாகச் சென்றால் சபா மண்டபத்தை அடையலாம்.

தவம் செய்யும் காமாட்சி அன்னையின் சந்நிதி தனியாக உள்ளது.

பஞ்சாக்னியில் காமாட்சி அம்மன் நிற்கும் கோலம் தனிச் சிறப்புடையது.

உள்ளே கருவறையில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.

ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.

ஸ்ரீ சக்கரம் கூர்ம (ஆமை) ஆசனத்தில் அமையப் பெற்றுள்ளது.

கருவறைக்குள் தரிசனம் முடிந்தபிறகு வெளிப் பிராகாரச் சுற்றில் கணபதியையும் சண்டியையும் தரிசனம் செய்யலாம்.

பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.

Tags:    

Similar News