ஆன்மிக களஞ்சியம்

தபஸ்காமாட்சி!

Published On 2023-09-25 10:41 GMT   |   Update On 2023-09-25 10:41 GMT
  • இத்திருமேனி ஏறத்தாழ 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்
  • தபஸ்காமாட்சியின் இருபக்கமும் இரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளன.

காமாட்சி ஆலயத்தில் எல்லோருடைய கண்களையும் மனத்தையும் ஒருங்கே கவர்ந்திழுப்பது தபஸ் காமாட்சியின் செப்புத் திருமேனியாகும்.

பீடத்திலிருந்து ஏறத்தாழ மூன்றடிக்குமேல் உயர்ந்திருக்கும் இத்திருமேனி தமிழ்நாட்டின் சிற்பக் கலைக்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பஞ்சாக்கினியின் செந்நாச்சுடர் முடியின் மீது தனது இடக்கால் பெருவிரலை ஊன்றி நின்று கொண்டு, வலக் காலை முன்பக்கமாக வளைத்து உயர்த்தி,

மாலையை ஏந்திக் கொண்டு, இடக் கரத்தால் சின்முத்திரையுடன் மார்பைத் தீண்டிக்கொண்டு தியான யோக நிலையில் உள்ளம் நெடிது அழ,

அன்னை தவமியற்றும் அற்புதத்தை அழகோவியமாக காட்டுகிறது இந்தப் பஞ்சலோகத் திருமேனி.

இந்தக் கோலம் ஒரு சில ஆலயங்களில் தூண்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், செப்புச் சிலை வடிவத்தில் இருப்பது இங்கு மட்டும்தான்.

இத்திருமேனி ஏறத்தாழ 15&ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தபஸ்காமாட்சியின் இருபக்கமும் இரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளன.

ஒன்று அன்னையின் ஏவல் கேட்டு நிற்கும் கிங்கரியின் திருவுருவம், மற்றொன்று கிராம தேவதை.

Tags:    

Similar News