ஆன்மிக களஞ்சியம்
null

அருள்மிகு தட்சிணாமூர்த்தி

Published On 2023-10-11 18:08 IST   |   Update On 2023-10-17 12:35:00 IST
  • மகேசுவர வடிவங்களுள் ஒன்று தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியின் வடிவம்.
  • இவர் கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்தில் தெற்கு முகமாக வீற்றிருக்கிறார்.

மகேசுவர வடிவங்களுள் ஒன்று தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியின் வடிவம்.

இவர் இத்திருத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்தில் தெற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

கல்லால மரத்தின் கீழ் யோகாசனத்தில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் நிலையிலும்,

முயலகன் என்ற அரக்கனை மிதித்த நிலையில் ஒரு திருவடியும், வீராசனமாக மற்றொரு திருவடியும் திகழ,

நான்கு திருக்கரங்களில் வலப்பகமுள்ள இரண்டில் சின் முத்திரையும், ருத்ராதட்ச மணிவடமும் கொண்டு,

இடப்பக்க திருக்கரங்களில் ஒன்றில் அமுத கும்பமும், மற்றொன்றில் வேதமும் கொண்டு காட்சி தருகிறார்.

இத்திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு ஒவ்வொரு வியாழனன்றும், முழு கடலையினாலான

மாலையினை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு மாணவர்கள் தங்களது வாழ்வில் கல்வி வளம் பெற்று வருகின்றனர்.

மேன்மைமிக்க இந்த ஞானக்கடவுளை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபட

ஞானமும், செல்வமும் பெருகும் சிவஞானமுக்தி கிடைக்கும்.

Tags:    

Similar News