ஆன்மிக களஞ்சியம்

தங்க அங்கி தரிசனம்

Published On 2023-07-01 10:56 GMT   |   Update On 2023-07-01 10:56 GMT
  • 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாக கொண்டாடப்படுகிறது.
  • சபரிமலை செல்ல முடியாத பெண்கள் தங்க அங்கியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடக்கும் பூஜைகளில் மண்டல, மகரவிளக்கு பூஜை முக்கியமானது. 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாக கொண்டாடப்படுகிறது. இதையட்டி அன்று அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இது கண்கொள்ளாக் காட்சியாகும்.

அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியின் எடை 420 பவுன் ஆகும். இது திருவிதாங்கூர் மகாராஜாவினால் அய்யப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதாகும். இந்த அங்கி மண்டல பூஜைக்காக 2 நாட்களுக்கு முன்பு ஆரன் முழா அருள்மிகு பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

சபரிமலை கோவில் மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விசேஷ அலங்காரத்துடன் இதை சந்நிதானத்துக்கு கொண்டு வருகிறார்கள். சபரிமலை செல்ல முடியாத பெண்கள் தங்க அங்கியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.

Tags:    

Similar News