ஆன்மிக களஞ்சியம்

ஆஞ்சநேயருக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது ஏன்?

Published On 2023-09-14 15:57 IST   |   Update On 2023-09-14 15:57:00 IST
  • அங்கே அசோகவனத்தில் சீதையை கண்டார்.
  • அனுமார் சீதைக்கு பிடித்த செம்மண்ணை அவரும் உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.

ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி அனுமார் இலங்கை சென்றார்.

அங்கே அசோகவனத்தில் சீதையை கண்டார். ராமர் நலமாக உள்ளாரா? என்று சீதை அனுமாரிடம் கேட்க,

அவர் எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்று அனுமார் கூறியுள்ளார்.

இதனை கேட்ட சீதை மகிழ்ச்சி அடைந்து தரையில் இருந்த செம்மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்.

இதனை பார்த்த அனுமார் சீதைக்கு பிடித்த செம்மண்ணை அவரும் உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.

இதனால் அவருக்கு செந்தூரகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News