ஆன்மிக களஞ்சியம்

18 படிகளின் மகத்துவம்

Published On 2023-11-19 12:43 GMT   |   Update On 2023-11-19 12:43 GMT
  • சத்தியமே ஒரு தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18-ம் படியாக விளங்குகிறது.
  • இருமுடியில்லாமல் அய்யப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18-ம் படி ஏற முடிவதில்லை.

கலியுக தேவதையாக அய்யப்பன் விளங்கும் காரணத்தால் சத்தியமே ஒரு தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18-ம் படியாக விளங்குகிறது.

அதனால்தான் சபரிமலை இந்த தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

இருமுடியில்லாமல் அய்யப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18-ம் படி ஏற முடிவதில்லை.

மஹிஷியை வதம் செய்ய மணிகண்டன் புறப்பட்ட போது, தேவேந்திரனே சிங்கமாகவும் குதிரையாகவும் உருக்கொண்டு அய்யப்பனைத் தாங்கி நின்றான்.

வன்புலி வாகனன் என்று நாம் அய்யப்பனை அழைத்தாலும், அது புலிப்பாலுக்காக நிகழ்ந்த ஒரு சம்பவம் மட்டுமே.

உண்மையில் சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைத்தான் கொடி மரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்..

பதினெட்டாம் படிகளுக்குக் காவலாக கடூரவன் என்ற கடுத்த சுவாமியும், க்ருஷ்ணாபன் என்ற கருப்ப சுவாமியும் இருப்பதாக ஸ்ரீபூதநாத உபாக்யானம் கூறுகிறது.

சபரி மலையின் மணிகண்டனின் அங்கரஷகனாக விளங்குபவன் வாபுரன் என்ற சிவ பூதகணத் தலைவன்.

கணேசும் நைர்ருதே வாயென மஞ்சாம்பாம் சப்ர பூஜயேத் பைரவெள த்வஸிதாங்கஞ்ச பூர்வே வாமே சவாபுரம்

கன்னிமூலையில் கணபதியும் வாயு திசையில் மாளிகைப்புறத்தனும் பகவானுக்கு முன் இரு கடூரவர்களும் கருப்பனும் இடப்புறத்தில் வாபுரனும் இருக்கிறார்கள்.

சபரிமலையை சுற்றியும் உள்ள 18 மலைகளும், பதினெட்டாம் படியில் உள்ள ஒவ்வொரு படிக்கும் ஒப்புமையாகக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News