search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வைகாசி விசாகத்தன்று ஞானோதயம் பெற்ற புத்தர்
    X

    வைகாசி விசாகத்தன்று ஞானோதயம் பெற்ற புத்தர்

    • ஒருவாரம் வரை அவரது தவம் நீடித்தது. அதன் தொடர்ச்சியாக வைகாசி விசாக தினத்தன்று ஞானோதயம் பெற்றார்.
    • அவர் தவம் செய்த அந்த மரம் போதி மரம் என்று அழைக்கப்படுகிறது.

    'ஆசையே துன்பத்திற்கு அடிப்படை காரணம்' என்னும் மாபெரும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கவுதம புத்தர்.

    இவரது போதனைகளைப் பின்பற்றுவோர் 'பவுத்தர்கள்' என்றும், அவர்கள் சார்ந்த சமயம் 'பவுத்தம்' என்றும் அழைக்கப்படுகின்றது.

    இன்றைய நேபாளத்தில் உள்ள லும் பினி என்ற கிராமத்தில் சாக்கிய மன்னரான கத்தோதனாருக்கும், மாயாதேவிக்கும் ஒரு வைகாசி விசாக நாளில் மகனாக பிறந்தார் கவுதம புத்தர்.

    'சித்தார்த்தர்' என்னும் பெயரிட்டு அவரை அழைத்தனர்.

    'புத்தர்' பிறந்த ஏழாவது நாளே அவரது தாய் மாயாதேவி இறந்து போனார்.

    இதையடுத்து, தன் அத்தை பிரஜூபதி கவுதமியால் வளர்க்கப்பட்டார்.

    16-வது வயதில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கை நடத்தினார்.

    இவர்களுக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான்.

    சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை.

    அமைதியை இழந்தார். உலக வாழ்க்கையில் தான் கண்ட துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.

    ஒருநாள் அவர் வெளியே சென்று கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் அவரது மனதை வெகுவாக பாதித்தன.

    வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார்.

    இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இதுபோன்ற காட்சி களை அவர் நேரில் கண்டதில்லை. அந்த காட்சிகள் அவரது சிந்தையை தூண்டி விட்டன.

    உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்கள் பற்றியும், அதற்கு பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்.

    இத்தகைய துன்பங் களுக்கு தீர்வு காண்பதை தனது லட்சியமாகக் கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக, தனது 29-வது வயதில் இல்லற, வாழ்க்கையை துறந்து துறவறத்தை மேற்கொண்டார்.

    வீட்டை விட்டு வெளியேறினார்.

    35-வது வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை என்கிற இடத்தில் சுமேதை என்ற பெண்ணிடம் மோர் வாங்கி குடித்து விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.

    அந்த இடத்தை விட்டு அகலாமல் கடும் தவம் செய்தார்.

    ஒருவாரம் வரை அவரது தவம் நீடித்தது. அதன் தொடர்ச்சியாக வைகாசி விசாக தினத்தன்று ஞானோதயம் பெற்றார்.

    அவர் தவம் செய்த அந்த மரம் போதி மரம் என்று அழைக்கப்படுகிறது.

    புத்த மதத்தினர் இந்த இடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வதை புனிதமாக கருதுகிறார்கள்.

    Next Story
    ×