என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தூய மனதுடன் உள்ளன்போடு செய்யும் சாதாரண பூஜையில் மகிழும் ஈசன்
- சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான்.
- எளிய முறையில் பலன் தரும் கணபதிபோல அவர் தகப்பனாரும் அப்படியே தருவார்.
சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான்.
எளிய முறையில் பலன் தரும் கணபதிபோல அவர் தகப்பனாரும் அப்படியே தருவார்.
ஒரு சமயம், பிரளயம் முடிந்து சிருஷ்டி தொடங்கும் காலத்தில் தேவர்கள் கயிலையை அடைந்து தாங்கள் எப்போதும் சக்தியோடு விளங்கும் இடத்தைத் தெரிவிக்கும்படி வேண்டினர்.
அதற்கு ஈசன், தேவர் பெருமக்களே! நான் எப்போதும் உங்களுக்காக லிங்க வடிவில் இருக்கிறேன்.
அதில் பிரதிஷ்டை, மந்திர உருவேற்றம் பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பினும் பக்தர்களைக் காப்பேன் என்று பதில் அளித்தார்.
சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வர ரீதியாக அமைகிறது.
வராக புராணம், பதுமராஜம், வைரம், மரகதம் முதலிய ரத்தினங்களான லிங்க பூஜை நல்ல பலனைத் தரும் என்றும், பவிஷ்ய புராணம், மணி, விபூதி, பசுஞ்சாணம், மாவு, தாமிரம், வெண்கலம் இவற்றில் செய்த லிங்க ஆராதனை சிறந்தது என்றும், படிக லிங்கம், செல்வம் கெடுத்து விருப்பங்களை அருளும் என்றும் பவிஷ்ய புராணம் கூறுவதை அறிதல் வேண்டும்.






