search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவாரூர் கோவில்-முக்கியமான விநாயகர்கள்
    X

    திருவாரூர் கோவில்-முக்கியமான விநாயகர்கள்

    • சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி.
    • திருவாரூரில் மூலவரை "வன்மீகநாதர்" என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

    திருவாரூர் கோவில்-முக்கியமான விநாயகர்கள்

    தியாகராஜர் கோயிலில் 84 விநாயகர்கள் உள்ளனர்.

    இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு.

    அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள, நடுக்கம் தீர்த்த விநாயகரை, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், டென்ஷனாக இருப்பவர்கள் வழிபடுகிறார்கள்.

    மேற்கு கோபுரத்தின் அருகில், சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன், நிஜத்தங்கம்தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த, "மாற்றுரைத்த விநாயகர்" அருள்பாலிக்கிறார்.

    நகை வாங்கும் முன் பெண்கள் இவரை வழிபடுகின்றனர்.

    சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி, சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார்.

    யோகா பழகுபவர்கள் இவரை வணங்குவது சிறப்பு.

    சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி.

    இந்த விநாயகர் முன்பு நின்றுதான், திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் "வாதாபி கணபதிம்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.

    திருவாரூரில் மூலவரை "வன்மீகநாதர்" என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

    இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி "கமலாம்பிகையும்" சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள்.

    க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.

    வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள்.

    இத்தலத்தின் வடபால் சுக்கனாறும், தென்பால் ஓடம்போக்கியாறும் ஒடுகின்றன.

    பஞ்ச பூதத்தலங்களுள் பிருதிவித் தலம். எல்லா சிவாலயங்களின் சான்னித்யமும் மாலை நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

    Next Story
    ×