என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    குடும்பப் பற்றிலிருந்து விலகி துறவியான ரத்தினசாமி செட்டியார்
    X

    குடும்பப் பற்றிலிருந்து விலகி துறவியான ரத்தினசாமி செட்டியார்

    • பெரியவரை அணுகவும் அவருக்கு இயலவில்லை, பேசவும் அவரால் முடியவில்லை.
    • பேசாமல் பின் தொடர்ந்தார். காவி உடை அணிந்தவர் குறி மேடைவரை வந்து அங்கிருந்த கோவிலுக்குள் நுழைந்தார்.

    மறுநாள் ஒன்றும் புரியாத நிலையில், ஆண்டவர் சன்னிதியை விட்டுப் பிரியவும் மனமின்றி, வீட்டுக்குச் செல்லவும் விருப்பமின்றி, அன்று மாலையில் கடைக்குச் சென்றார்.

    மூடியிருந்த கடையைத் திறந்தபோது காவி உடை தரித்த யாரோ ஒரு பெரியவர் அங்கிருந்து வெளிப்பட்டுச் செல்வது போலத் தோன்றக் கண்டார்.

    கடையை அப்படியே விட்டு விட்டு அவர்தம் அடிச்சுவட்டைப் பின்பற்றி உடன் சென்றார்.

    பெரியவரை அணுகவும் அவருக்கு இயலவில்லை, பேசவும் அவரால் முடியவில்லை.

    பேசாமல் பின் தொடர்ந்தார். காவி உடை அணிந்தவர் குறி மேடைவரை வந்து அங்கிருந்த கோவிலுக்குள் நுழைந்தார்.

    பின் வந்த செட்டியார் உள்ளே புகுந்த போது பெரியவரைக் காணவில்லை.

    அதனால் திகைப்பும் வியப்பும் அடைந்தார், செட்டியார். அருகிருந்தவர்களும் நிகழ்ந்ததை அறிந்து வியப்பு மேலிட்டனர்.

    இத்தகைய சில நிகழ்ச்சிகளால் செட்டியார், குடும்பப் பற்றுத் தவிர்த்து துறவு நெறி உணர்வு பெருகி, ஆண்டவர் சன்னிதியிலேயே இருந்து கொண்டு வழிபாடு செய்யத் தொடங்கினார்.

    Next Story
    ×