search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆண்டி கோலத்தில் காட்சி தரும் வழபழனி ஆண்டவர்
    X

    ஆண்டி கோலத்தில் காட்சி தரும் வழபழனி ஆண்டவர்

    • வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி மீனாட்சி அம்மன் தரிசனம் தருகிறார்.
    • பக்கத்திலேயே ஆறுமுகன், வள்ளி தெய்வானையுடன் செப்புத் திருமேனிகள் தனி சன்னதி இருக்கிறது.

    தெற்கு நோக்கியுள்ள கண்களை கவரும் வண்ணக் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றதும் முதலில் வரசித்தி விநாயகர் சன்னதி இருக்கிறது.

    அவரை வணங்கி பிரகாரத்திற்கு வந்தால் கொச்சநாதர் சன்னதி, அதைத் தொடர்ந்து மேலண்டை பிரகாரத்தை வலம் வந்து வடக்கு பிரகாரத்திற்கு வந்தால் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதி.

    பழனி ஆண்டவரை செவ்வாய் கிரகமாக கருதப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் செவ்வாய் கிரகத்திற்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

    கிழக்கு பிரகாரத்தில் அருணகிரிநாதர் சன்னதி, அனுமான் சன்னதிகளும் இருக்கின்றன.

    உயர்ந்த கொடிக்கம்பம், மயில் வாகனம், இவற்றை கடந்து கர்ப்பகிரகத்திற்கு செல்லும் மண்டபம், அதன் மேல் பகுதிகளில் கந்தனின் முக்கிய திருவிளையாடல் சிற்பங்களை காணலாம்.

    கர்ப்பகிரகத்தில் கிழக்கு நோக்கி ஆண்டிக்கோலத்தில் தரிசனம் தருகிறார் வடபழனி ஆண்டவர்.

    கர்ப்பக் கிரகத்தின் சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, காளி, பைரவர், மகாலட்சுமி, சண்டிகேசர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

    வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி மீனாட்சி அம்மன் தரிசனம் தருகிறார்.

    பக்கத்திலேயே ஆறுமுகன், வள்ளி தெய்வானையுடன் செப்புத் திருமேனிகள் தனி சன்னதி இருக்கிறது.

    பழனியைப் போலவே இங்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    திருவிழாக்களும் முறைப்படி நடக்கின்றன.

    தென்பழனிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து வ-டபழனி ஆண்டவருக்கு பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.

    Next Story
    ×