search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சாம்சங் வலைத்தளத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டு வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டு வலைத்தளங்களின் அதிகாரப்பூர்வ சப்போர்ட் பக்கத்தில்  லீக் ஆகியுள்ளது. புதிய தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் SM-N960U என்ற குறியீட்டு பெயர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் நோட் 9 ஸ்மார்ட்போன் இதே குறியீட்டு பெயர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பென்ச்மார்க்கிங் வலைத்தளங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இதன் சர்வதேச மாடலில் எக்சைனோஸ் 9810 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சமீபத்திய தகவல்கள் Androidu.ro வலைத்தளம் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி நோட் 9 ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் வட ஆப்ரிக்கா மற்றும் தென்னாப்ரிக்கா வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பக்கங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் SM-N960U குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இதில் 'U' என்ற வார்த்தை புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படுவதை உணர்த்தும் வகையில் உள்ளது.


    கோப்பு படம்

    சாம்சங் அதிகாரப்பூர்வ சப்போர்ட் பக்கங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும் கீக்பென்ச் வலைத்தளத்தில் வெளியான தவல்கள் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் போன்றே புதிய ஸ்மார்ட்போனும் சிங்கிள் கோரில் 2190 புள்ளிகளையும், மல்டி-கோர்களில் 8806 புள்ளிகளை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுவதை விட முன்னதாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

    இத்துடன் புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்ற டிஸ்ப்ளே முந்தைய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்துடன் புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
    Next Story
    ×