என் மலர்
செய்திகள்

மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்
சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar
பெய்ஜிங்:
சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது.
இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. #MissWorld2018 #Mexico #VanessaPoncedeLeon #ManushiChhillar
Next Story






