search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2வது ஒருநாள் போட்டி - ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
    X

    2வது ஒருநாள் போட்டி - ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜேசன் ராய் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேர்ஸ்டோவ் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் அதிரடியாக ஆடி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    அடுத்து இறங்கிய டேவிட் வில்லே அதிரடியாக ஆடினார். லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட். இது சர்வதேச அளவில் 12-வது சதம். டேவிட் வில்லே 30 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இறங்கினர். ரோகித் 15 ரன்னிலும் ஷிகர் தவான் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவ்ருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சுரேஷ் ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினார். தோனி 37 ரன்னில் வெளியேற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.

    அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    இங்கிலாந்து அணி சார்பில் லியாம் பிளங்கெட் 4விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கிறது.
    Next Story
    ×