search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேஸிங்கில் கடைசி 3 ஓவரில் விஸ்வரூபம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
    X

    சேஸிங்கில் கடைசி 3 ஓவரில் விஸ்வரூபம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

    சேஸிங் செய்யும்போது கடைசி 3 ஓவரில் விஸ்வரூபம் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றியை ருசித்துள்ளது. #IPL2018 #CSK
    ஐபிஎல் 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பதினான்கு லீக் ஆட்டத்தில் 9-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற குவாலிபையர் 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது.

    முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது, பின்னர் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் அபார பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

    டு பிளிசிஸ் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி 3 ஓவரில், அதாவது 18 பந்தில்  43 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே இருந்தது. ஆனால் 13 பந்திலேயே, அதாவது 19.1 ஓவரிலேயே 140 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெறுவது சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இந்த சீசனில இது முதல் தடவை அல்ல. ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போது முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.

    பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. 17 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 3 ஓவரில் (18 பந்தில்) 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. 18-வது ஓவரில் 20 ரன்னும், 19-வது ஓவரில் 20 ரன்னும் எடுத்தது. கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 169 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.

    5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது. முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் அடித்தது. பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. கடைசி மூன்று ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



    24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்து 8 ஓவரில் 205 ரன்கள் குவித்தது. பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. கடைசி 3 ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 2.4 ஓவரிலேயே 44 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெரும்பாலான அணிகள் கடைசி 3 ஓவரில் 35 ரன்களை கூட எடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் விஸ்வரூபம் எடுத்து எளிதாக சேஸிங் செய்து அசத்தியுள்ளது.
    Next Story
    ×