search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடும் அட்டவணை
    X

    2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடும் அட்டவணை

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள் விவரம் வெளியாகியுள்ளது. #WorldCup2019
    கொல்கத்தா:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. ஐ.சி.சி. போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்படும். இதற்கிடையே ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது.

    1992-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு முதல் முறையாக ரவுன்ட் ராபின் அடிப்படையில் லீக் சுற்று நடக்கிறது. அதாவது பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்க வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய துணை கண்டத்து ரசிகர்கள் போட்டியை இரவு 11 மணிக்குள் டி.வி.யில் ஆட்டங்களை பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்-இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    அரைஇறுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பரமவைரிகள் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது. இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9-ந்தேதி லண்டன் ஓவலில் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14-ந்தேதி நடக்கிறது. ஜூலை 15-ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும்.

    இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள் விவரம் வருமாறு:-

    தேதி                      எதிரணி                      மைதானம்

    ஜூன்.5         தென்ஆப்பிரிக்கா          சவுதம்டன்

    ஜூன்.9           ஆஸ்திரேலியா              தி ஓவல்

    ஜூன்.13           நியூசிலாந்து               நாட்டிங்காம்

    ஜூன்.16            பாகிஸ்தான்             மான்செஸ்டர்

    ஜூன்.22         ஆப்கானிஸ்தான்        சவுதம்டன்

    ஜூன்.27         வெஸ்ட் இண்டீஸ்       மான்செஸ்டர்

    ஜூன்.30             இங்கிலாந்து             பர்மிங்காம்

    ஜூலை.2        வங்காளதேசம்           பர்மிங்காம் #WorldCup2019
    Next Story
    ×