search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் முகமது சாலா
    X

    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் முகமது சாலா

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா தட்டிச் சென்றுள்ளார். #EPL
    எகிப்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் ரோமா அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017-ல் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் லிவர்பூல் அணிக்கு மாறினார். 36.9 மில்லியன் பவுண்டுக்கு லிவர்பூல் அணி வாங்கியது.

    லிவர்பூல் அணியில் இணைந்த முகமது சாலா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2017-18 சீசனில் 31 கோல்கள் அடித்துள்ளார். ஒட்டு மொத்தமாக லிவர்பூல் அணிக்காக 41 கோல்கள் அடித்துள்ளார்.

    2017-18 சீசன் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்யும் வேலை நடைபெற்றது. இதில் மான்செஸ்டர் சிட்டி அயினி் கெவின் டி ப்ருயின், டேவிட் சில்வா, சானே மான்செஸ்டர் யுனைடெட் கோல்கீப்பர் டேவிட் டி கியா, டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஆகியோருடன் முகமது சாலா போட்டியிட்டார்.



    இறுதியில் சிறந்த வீரருக்கான விருதை முகமது சாலா தட்டிச் சென்றுள்ளார். லெரோய் சானே சிறந்த இளம் வீரருக்கான விருதைப் பெற்றார்.

    2017-18 சீசனுக்கா சிறந்த வீரர் விருதை பெற்ற முகமது சாலா கூறுகையில் ‘‘இது ஒரு மிகப்பெரிய கவுரவம். நான் அதிக அளவில் உழைத்தேன். இந்த விருதை பெற்றதால் மகிழ்ச்சியாக உள்ளேன்’’ என்றார். இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 34 கோல்தான் ஒரு சீசனில் தனிப்பட்ட வீரர் அடித்த அதிகபட்ச கோலாக உள்ளது. மூன்று போட்டியில் நான்கு கோல்கள் அடித்தால் முகமது சாலா இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
    Next Story
    ×