என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

வருங்கால கணவரிடம் மன்னிப்பு கேட்கும் டோனி ரசிகை
டோனிதான் எப்போதும் என்னுடைய முதல் காதலர் என்பதால், அவரது ரசிகை ஒருவர் வருங்கால கணவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். #CSKvRR
ஐபிஎல் தொடரின் 17-வது போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவர் இந்திய அணியின் ராசியான கேப்டன் என்றும், சாதனைப் கேப்டன் என்றும் பெயரெடுத்தவர்.
டோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதேபோல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் கைப்பற்றி உள்ளது.
அவருக்கு தீவிரமான ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் உள்ளனர். நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகை ஒருவர் வித்தியாசமான பேனர் வைத்திருந்தார். அந்த பேனர் அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளானது.
அந்த பெண் ரசிகை தனது கையில் வைத்திருந்த பேனரில் ‘‘டோனிதான் எப்போதும் என்னுடைய முதல் காதலர். எனவே வருங்கால கணவரே மன்னியுங்கள். I Love you Mahi!’’ எனக்குறிப்பிட்டுள்ளார்

Next Story