என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் சாதனையை தக்க வைத்தது பார்சிலோனா
    X

    மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் சாதனையை தக்க வைத்தது பார்சிலோனா

    லா லிகா கால்பந்து லீக் செவியாவிற்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் பார்சிலோனா சாதனையை தக்கவைத்தது. #LaLiga #Messi
    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து லீக்கில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் செவியா - பார்சிலோனா அணிகள் மோதின. சொந்த மைதானத்தில் செவியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பிரான்கோ வாஸ்குயிஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் செவியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் 50-வது நிமிடத்தில் லூயிஸ் முரியல் மற்றொரு கோல் அடித்தார். இதனால் 2-0 என செவியா வலுவான முன்னிலையை பெற்றது. பார்சிலோனா 2017-18 சீசனில் தோல்வியை சந்திக்காத கிளப் என்ற பெருமை தகர்ந்து விடும் என்ற நிலை உருவானது. 87-வது நிமிடம் வரை பார்சிலோனா கோல் அடிக்கவில்லை.



    88-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் கோல் அடிக்க, 89-வது நிமிடத்தில் மெஸ்சி அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. அத்துடன் பார்சிலோனா தனது சாதனையை தக்க வைத்துள்ளது.
    Next Story
    ×