search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை- 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று கோலி சாதனை
    X

    ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை- 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று கோலி சாதனை

    ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli #ICCRankings
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் குவித்திருந்தார். இதன் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் வரலாற்று உச்சத்தை பெற்றுள்ளார்.

    ஐசிசி இன்று ஒருநாள் போட்டிக்கான தரவரிசைகளை வெளியிட்டது. இதில் விராட் கோலி 909 புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சக்கட்ட புள்ளிகள் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    மேலும், ஒரேவேளையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளிகளு மேல் பெற்ற 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.



    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் விவியன் ரிச்சர்ட்சன் 1985-ல் 935 புள்ளிகள் பெற்றிருந்தார். இதுதான் உச்சக்கட்ட புள்ளியாகும், அதன்பின் ஜாகீர் அப்பாஸ் 1983-ம் ஆண்டு 931 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    3. கிரேக் சேப்கல் 1981-ம் ஆண்டு 921 புள்ளிகள்

    4. டேவிட் கோவன் 1983-ம் ஆண்டு 919 புள்ளிகள்

    5. டீன் ஜோன்ஸ் 1991-ம் ஆண்டு 918 புள்ளிகள்

    6. ஜாவித் மியான்டட் 1987-ல் 910 புள்ளிகள்

    7. விராட் கோலி 2018-ல் 909 புள்ளிகள்

    8. பிரையன் லாரா 1993-ம் ஆண்டு 908 புள்ளிகள்

    9. ஏபி டி வில்லியர்ஸ் 2015-ம் ஆண்டு 902 புள்ளிகள்

    10. ஹசிம் அம்லா 2012-ம் ஆண்டு 901 புள்ளிகள்
    Next Story
    ×