search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாப்பத்திக்கு அருமையான சாஹி மட்டன் குருமா
    X

    சாப்பத்திக்கு அருமையான சாஹி மட்டன் குருமா

    மட்டனை வைத்து பிரியாணி, குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று கொஞ்சம் வித்தியாசமாக சாஹி மட்டன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத மட்டன் - 600 கிராம்
    வெங்காயம் - 3
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 4
    இலவங்க பட்டை - 1
    மிளகு - 7
    இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    தயிர் - 1/2 கப்
    முந்திரி பேஸ்ட் - 1/4 கப்
    கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
    கிரீம் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதோடு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு 1 நிமிடம் தொடர்ந்து வதக்கவும்.

    அடுத்து அதில் கழுவிய மட்டனை சேர்த்து, தீயை அதிகப்படுத்தி 5 நிமிடம் கிளறி வேகவிடவும்.

    பின்னர் அதில் மல்லிப் பொடி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மறுபடியும் 5 நிமிடம் வேக விடவும்.

    அடுத்து அதில் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் தீயின் அளவை குறைத்து, மட்டனை தட்டை வைத்து மூடி, மட்டன் வேகும் வரை வேக விடவும்.

    பிறகு அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் கரம் மசாலா பொடியை போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

    கடைசியாக அதில் கிரீமை சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

    இப்போது சுவையான சாஹி மட்டன் குருமா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×