என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பலராமனின் மனைவி ரேவதி
    X

    பலராமனின் மனைவி ரேவதி

    பலராமனின் மனைவியின் பெயர் ரேவதி. மிகவும் அழகு வாய்ந்தவள். பலராமன் ரேவதியை மணந்த கதையை அறிந்து கொள்ளலாம்.
    பலராமனின் மனைவியின் பெயர் ரேவதி. மிகவும் அழகு வாய்ந்தவள். அவளது தந்தை ககுத்மி என்ற அரசன். ககுத்மியும், ரேவதியும் வைவஸ்தவ மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தினுடைய கிருதயுகத்தில் பிறந்தவர்கள். கிருதயுகத்தில் தோன்றியவர்கள் நேரடியாக பூமிக்கும், தேவலோகத்திற்கும் செல்லும் சக்தி படைத்திருந்தனர். எனவே ககுத்மி, தன்னுடைய மகள் ரேவதிக்கு சரியான மணாளன் யார் என்று அறிந்து கொள்வதற்காக பிரம்மலோகம் சென்றான். உடன் மகள் ரேவதியையும் அழைத்துச் சென்றான். அந்த நேரத்தில் பிரம்மா தியானத்தில் இருந்ததால், அவர்கள் பிரம்மலோகத்தில் 20 நிமிடம் காத்திருக்க வேண்டியதிருந்தது. பிரம்மலோகத்தில் 20 நிமிடம் என்பது, பூலோகத்தில் பல யுகங்களுக்கு சமமாகும்.

    அதன்படி பூலோகத்தில் வைவஸ்தவ மன்வந்தரத்தின் 28-வது மகாயுகத்தில் துவாரயுகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரம்மன் தவம் முடிந்து வந்ததும், அவரிடம் தன் மகளுக்கு ஏற்ற மணாளனை சொல்லும்படி ககுத்மி கேட்டான். அதற்கு பிரம்மதேவர், “நீ இங்கு வந்து காத்திருந்த நேரத்தில் பூலோகத்தில் 27 மகாயுகங்கள் முடிந்து விட்டன. இப்போது அங்கு இறைவன், கண்ணன்- பலராமன் என்ற இரு சகோதரர்களாக அவதரித்து லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறார். நீ பூலோகம் சென்று, உன் மகளை பலராமனுக்கு மணம் முடித்து வை” என்றார்.

    அவர்கள் பூலோகம் வந்தபோது, மனித இனம் பெருமளவில் மாற்றம் அடைந்திருந்தது. மற்ற மனிதர்களுடன் ஒப்பிடுகையில் ககுத்மியும், ரேவதியும் அசுரர்களைப் போல மிகப்பெரிய உருவத்தில் காட்சியளித்தனர். அவர்களின் நோக்கம் அறிந்த பலராமன், ரேவதியை தொட்டதும் அவள் அந்த காலகட்டத்திற்கு ஏற்ற மனித உருவத்திற்கு மாறினாள். அதன்பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
    Next Story
    ×