என் மலர்
பாலையா நடித்துள்ள பகவந்த் கேசரி-யின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக பகவந்த் கேசரி படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜனநாயகன் விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விஜய் சாருடைய கடைசிப் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது படம் திரைக்கு வந்த பின்புதான் தெரியும். வாரிசு படப்பிடிப்பு தளத்தில் விஜய் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2-ந்தேதி ஜனநாயகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. அதன் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என தெரிகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. கே.வி.என் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் அனிருத் இசையமைத்துள்ளார்.
பகவந்த் கேசரியின் ரீமேக் என வதந்தி பரவி வரும் நிலையில் ஜனநாயகன் பட இயக்குநர் ஹெச். வினோத் கூறுகையில் "ஜனநாயகன் படத்திற்காக நாங்கள் 6 மாறுபட்ட வெர்சனில் கதை எழுதினோம். இந்த கதை முக்கியமாக விஜய், பாபி தியோல், மமிதா பைஜு ஆகியவரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த பின், இந்த படத்திற்கு ஏன் ஜனநாயகன் டைட்டில் வைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள். விஜய் அரசியலுக்குள் நுழைந்ததில் இருந்து, கதையில் அரசியல் தொடர்பான தகவலை சேர்த்தேன். சற்று தயக்கத்துடன் தயாரிப்பாளரிடம் இந்த விசயத்தை சொன்னேன். ஆனால், அவர் மிகவும் சந்தோசம் அடைந்தார். அரசியல் தொடர்பான கருத்துகள் குறித்து உறுதியான சில ஆலோசனைகளும் வழங்கினார்.
இது தளபதி படம். ரசிகர்கள் முதல் காட்சிக்காக காத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் டீசர், டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்கீரின் மூலம் படத்தின் அடையாளம் குறித்து வதந்திகளுக்கு விடை கிடைக்கும். அத்துடன மேற்கொண்டு தெளிவும் கிடைக்கும்" என்றார்.
ஆனால், ரீமேக் குறித்து வதந்தி வருகிறதே, என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என நேரடியாக பதில் அளிக்கவில்லை.
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் நடிப்பில் 2023 ஆண்டு வெளியான படம் 'குட் நைட்'. குறட்டை விடுபவனின் வாழ்க்கையையும் அதனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்களை இப்படம் அழகாக வெளிக்காட்டி இருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகன் மணிகண்டனுக்கும், கதாநாயகி மீதா ரகுனாத்துக்கும் நல்ல புகழும், பேரும் கிடைத்தது. இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
அதேபோல் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது. கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்துது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் பாதிகப்பட்ட தமிழ் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வந்து எதிர்கொள்ளும் சிக்கலை இயக்குநர் நகைச்சுவை கலந்த எமோசனல் குடும்ப படமாக உருவாக்கியிருந்தார்.
இரண்டு படங்களையும் தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது. இதில் ஒருசில படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த நிலையில் தனது 8-வது படம் குறித்து தகவலை ஆங்கில புத்தாண்டான நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த படமும் குட்நைட், டூரிஸ்ட் பேமிலி போன்று நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள், திரைப்படத் துறையினர், ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் இதன் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்,
ஷியாம் ஜாக் (Shiyam Jack) என்பவருக்கு ரவி மோகன், ரவி மோகன் ஸ்டூடியோஸ், ரவி மோகன் ஃபவுண்டேஷன் அல்லது ரவி மோகன் ரசிகர் மன்றம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ஷியாம் ஜாக் இத்தகைய தொடர்பு இருப்பதாக கூறுவது அல்லது தெரிவிப்பது முற்றிலும் தவறானதும் அனுமதியற்றதும் ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் அல்லது செயல்பாடுகள் தொடர்பாக ஷியாம் ஜாக்கை தொடர்பு கொள்ளுதல், அவருடன் எந்தவிதமான உடன்பாடு, ஒத்துழைப்பு அல்லது பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வகையான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படின், அதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட நபரையே சாரும். பெயர், புகழ் மற்றும் நற்பெயரை தவறாக பயன்படுத்துவதையும், தவறான புரிதல்களையும் தவிர்க்கும் பொருட்டு இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு ரவி மோகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது.
- எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர்.
திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோகாட்சி வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் வசிக்கும் பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளாக மிக அபாயகரமானதாக இருக்கிறது என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. சென்னையில் நான் வசிக்கும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிக அபாயகரமானதாக இருக்கிறது
எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள், சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்காரர்களில் பெரும்பாலானோர் இனவெறியர்களாக இருப்பதற்கு பெருமைப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக வெறுத்துத் தாக்குகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல் இத்தகையவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல்குழுக்களும், சாதி அடிப்படையிலான அமைப்புகளும் ஓடி வருகின்றன.
இதை ஏற்றுக்கொண்டு உண்மை நிலையை புரிந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாதா? நான் உட்பட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என சந்தோஷ் நாராயணன் கூறினார்.
- டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் உலகளவில் 80 கோடி ரூபாய் வசூலித்தது
- டிமான்ட்டி காலனி 3 படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை ஜூலை மாதம் படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்துள்ளது.
- குழந்தைகளை ரசிகர்களாக கொண்ட கிராபிக்ஸ் படம்
- ஆரம்ப காலத்திலிருந்தே எடுக்க நினைத்தப் படம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் மதராஸி. இதில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தான் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்து பேசியுள்ளார் முருகதாஸ்.
இயக்குநர்கள் ராம், மாரி செல்வராஜ், கிருத்திகா உதயநிதி, அஸ்வந்த் மாரிமுத்து ஆகியோருடன் இணைந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அப்படம்தான் தான் முதலில் இயக்கவேண்டும் என நினைத்த படம் என்றும், அது ஒரு கிராபிக்ஸ் படம், அதில் குரங்கு தான் மெயின் ரோல், அது குழந்தைகளுக்கானது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர்,
"நான் எனது அடுத்தத் திரைப்படத்தை குரங்கை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு (கிராபிக்ஸ் படம்) இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இதுவே எனது முதல் படமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்த படம், நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே இந்த எண்ணம் என்னிடம் இருந்தது. இந்தப் படம் முக்கியமாக குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
- மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்பட 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி அம்மாள் ஏராளமான விருதுகளையும் பெற்று உள்ளார்.
- கடந்த 2 நாட்களாக லட்சுமி அம்மாளின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 75). மறைந்த கிராமிய பாடகி பரவை முனியம்மாவின் நெருங்கிய தோழியான இவரும் பிரபல கிராமிய பாடகியாக வலம் வந்தார். இதனால் கோவில் திருவிழா மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் தனது கணீர் குரலால் கிராமிய இசையில் தமிழ் மணக்க பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார் லட்சுமி அம்மாள்.
இந்த நிலையில் 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' படத்தில் "ஊரோரம் புளியமரம்" பாடல் பாடி லட்சுமி அம்மாள் நடித்தார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனால் பிரபலம் அடைந்த லட்சுமி அம்மாள் மேலும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பாடி வந்தார்.
பக்தி, கும்மிபாட்டு, தாலாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி பாடல்களை மண்மனம் மாறாமல் கிராமிய வாழ்க்கையை கருத்தில் கொண்டு பாடிய இவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்பட 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி அம்மாள் ஏராளமான விருதுகளையும் பெற்று உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லட்சுமி அம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கடந்த 2 நாட்களாக லட்சுமி அம்மாளின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தனது வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- 'பேட்டில் ஆஃப் கல்வான்' திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- இந்தப் படம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும்
நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்டில் ஆஃப் கல்வான்' (Battle of Galwan) திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
2020-ம் ஆண்டு இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை மையமாக வைத்து சல்மான் கான் இந்தப் படத்தைத் தயாரித்து ராணுவ வீரர் பாத்திரத்தில் நடித்து வருகிறார். சில நாட்கள் முன் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.
இதற்குச் சீன அரசு ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும் என்றும், வரலாற்றைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியிருந்தது.
ஜனநாயக நாடான இந்தியாவில் படைப்பாளிகளுக்குத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க முழு சுதந்திரம் உண்டு என்றும், இதில் வெளிநாடுகளின் தலையீட்டை ஏற்க முடியாது என்றும் இந்தியா பதிலளித்துள்ளது.
- சமூக வலைதளத்தில் பகிர்வோர்களைக் காவல்துறை இனங்கண்டு கைது செய்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்.
- இவை எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.
திருத்தணி ரெயில் நிலையம் அருகே இளைஞர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருத்தணி விவகாரம் இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது!
அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம்.
இத்தகைய குற்றச் செயல்கள் பள்ளி,கல்லூரிகளிலும் தலைவிரித்து ஆடுவதை அலட்சியமாகப் பார்த்ததன் விளைவுதான் இன்றைக்குப் பொதுவெளியில் எந்தவோர் அச்சமுமின்றி வெளிப்படும் கும்பல் மனநிலைக்குக் காரணம்.
இந்நிலைக்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய தருணமிது.சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதம்.
அதை எவ்வகையிலும் நாம் சிதைத்துவிடக் கூடாது.நமக்குள் இருக்கிற வேறுபாடுகளைக் களைந்தெரிந்து, சகோதரத்துவத்தைப் பேண வேண்டும். அதைவிடுத்து வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும்.
இந்த வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும். 'நகைச்சுவை' பதிவுகள் தொடங்கி கடுமையான சொல்லாடல்கள் வரை சமூக வலைதளங்களிலும் நம் அன்றாடப் பேச்சுகளிலும் இந்த மனநிலை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது.
இதைக் களைவதற்கான ஒரே வழி, மக்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்பதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள தனிநபர் சுதந்திரத்தையும் உரிமையையும் சக மனிதர்கள் ஏற்க வேண்டும், அதுவே அறமும் கூட.
மேலும், பொதுவெளியில் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ஓர் அப்பாவி இளைஞனைக் கொடூரமான ஆயுதங்களால் தாக்குவதை வீடியோ எடுத்து அதைத் தற்பெருமையாகக் கருதி, சமூக வலைதளத்தில் பகிர்வோர்களைக் காவல்துறை இனங்கண்டு கைது செய்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்.
மேலும், சமூக வலைதள மோகத்தில் சிறார்களும் இளைஞர்களும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும், வன்முறை தூண்டும் வகையிலும் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ரீல்ஸ் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டும்.
போதை, ஆயுதக் கலாச்சாரம், சமூகப் பிரிவினை எனத் தனித்தனி காரணிகளைக் கொண்டு இப்பிரச்சினைகளை அணுகக் கூடாது. இவை எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ எந்தவகையிலும் நாம் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மாரி செல்வராஜும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
- ஏற்கனவே ஜனநாயகன் உடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோதுகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே ஜனநாயகன் உடன் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்த பராசக்தி படம் மோதுகிறது.
இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் stay tuned என தெரிவித்துள்ளது. இதனால் மங்காத்தா ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். எனவே குட் பேட் அக்லிக்கு பின் வறட்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அஜித்தின் அட்டகாசம் படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆனது. அதேபோல அமர்க்களம் படமும் பிப்ரவரியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய சூரியபிரதாப் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் புதிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
- நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இயக்கியத்தில் படம் உருவாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் பாகம் 2-ஐ தயாரிக்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. இந்த நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பட பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டாக நடைபெற்றது. கடந்த 6 மாதங்களுக்கு மேலான நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மூக்குத்தி அம்மன் 2 மிகப்பிரமாண்டாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர். இப்படத்தை 2026 கோடை விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.








