search icon
என் மலர்tooltip icon
    • பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

    இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

    அறிவியல் பாடத்தில் 96.33 சதவீத மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீத மாணவர்களும், வேதியியலில் 99.14 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • வரும் 12ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை.

    வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு அலர்ட் விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரெஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 12ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருபத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதனால், இன்றும், நாளையும் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.
    • சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

    சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. முதலில் படம் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வெளியாக போவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் படம் தற்பொழுது மே 17 ஆம் தேதி வெளியாகும் என வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலான மாலு மாலு என்ற பாடல் இன்று மதிய வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர்.
    • கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    நாகர்கோவில்:

    திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.

    நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியது. இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

    கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை 6 பேரையும் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சர்வதர்ஷித் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆனது. பலியான வெங்கடேஷ், பிரவீன் சாம், காயத்ரி, சாருகவி, சர்வ தர்ஷித் ஆகியோரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் 5 பயிற்சி டாக்டர்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் 2 நாட்களாக கடல் சீற்றமாக இருக்கும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் குளச்சல் கோடிமுனை பகுதியில் நேற்று கடல் அலையில் சிக்கி சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். தேங்காய்பட்டினம் பகுதியில் தந்தையுடன் வந்திருந்த சிறுமி ஆதிரா (7) என்பவரை கடல் அலை இழுத்துச்சென்றது.

    அவரது உடலை இன்று காலை மீட்டனர். நேற்றும், இன்றும் கடல் அலையில் சிக்கி குமரி மாவட்டத்தில் 8 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தேர்தல் நாளான ஜூன் 1-ந் தேதி உ.பி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
    • வரும் 13-ந் தேதி அவர் வாரணாசியில் வாகன பேரணி நடத்துகிறார்.

    பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

    இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1-ந் தேதி உ.பி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரமதர் மோடி வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    அதற்கு முந்தைய நாள் 13-ந் தேதி அவர் வாரணாசியில் வாகன பேரணி நடத்துகிறார்.

    பேரணி செல்லும் பாதை இறுதி செய்யப்பட்டு விட்டது என்றும் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக வாரணாசி நகர பாஜக தலைவர் வித்யாசாகர் ராய் தெரிவித்தார்.

    • இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
    • மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார்.

    நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பிரபல ஆன்-லைன் உணவு வினியோக நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 15 வரையிலான காலகட்டத்தில் தங்களுக்கு வந்த ஆர்டர்கள் குறித்து கூறி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் 4.6 லட்சம் ஆர்டர்களும், காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் சுமார் 80 ஆயிரம் ஆர்டர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார். இது இந்திய அளவில் ஒருவர் இதுவரை மிகவும் அதிகமாக ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் ஆர்டர் ஆகும்.

    • நாய்களின் உரிமையாளருக்கு இன்று காலை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    • நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது.

    நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயங்களுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் நாய்களை பூங்காவுக்குள் அழைத்து வந்த உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்பதாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறினார்.

    படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    சென்னை ஆயிரம் விளக்கில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைதான நிலையில், அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்றாகும். ராட்வீலர் வகை நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்ற தடையும் உள்ளது.

    3 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் நிலைய ஜாமினில் விடுவிக்க உள்ள பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாய்களின் உரிமையாளருக்கு இன்று காலை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியை பொருத்தவரை எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்.

    இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைத் துறையுடன் சேர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார்.
    • தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

    திருச்சி:

    கோவிந்தா. கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்க நாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

    இவ்வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 4.30 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


    பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழச்சித்திரைவீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

    சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர். நாளை(7-ந்தேதி) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும். நாளை மறுநாள் (8-ந்தேதி) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் , இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது.
    • ஜெயக்குமார் வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது தனது காரை எடுத்துச்சென்றுள்ளார்.

    அப்போது அவர் தனது 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவரது தோட்டத்திற்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அவரது செல்போன்கள் இதுவரை போலீசாரின் கையில் சிக்கவில்லை.

    அந்த செல்போன்கள் எங்கே மாயமானது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அதனை கைப்பற்றினால் தான் அவரது செல்போனுக்கு கடைசியாக யார் தொடர்பு கொண்டார். அவர் மாயமான 2-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் யாருக்கெல்லாம் அவர் தொடர்பு கொண்டு பேசினார் என்ற விபரம் தெரியவரும் என்பதால் அதனை தேடி வருகின்றனர்.

    அதே நேரத்தில் அவரது வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.

    இதனால் யாரேனும் கேமராவை திட்டமிட்டு பழுதாக்கினார்களா? அல்லது கேமரா வேலை செய்யவில்லை என்பதை நன்கு தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதனை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும்.

    மாணவ-மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது பள்ளிகள் மூலமும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினாலோ, விடைத்தாள் நகல் பெறவோ விண்ணப்பிக்கலாம்.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×