search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச், ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச், ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

    • 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.
    • 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா), 8-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 2-வது சுற்று ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

    உலகின் முதல் நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து) 3-வது சுற்றில் குரோஷியாவை சேர்ந்த 30-வது வரிசையில் உள்ள பெட்ரா மேட்ரிச்சை எதிர்கொண்டார். இதில் ஸ்வியா டெக் 6-2, 7-5 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை எலிசா பெட்டாவை வீழ்த்தினார். விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்), சுவிட்டோலினா (உக்ரைன்), ஆகியோரும் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 32-ம் நிலை வீராங்கனை மரியா பவுஸ்கோவா (செக் குடியரசு) 7-6, (7-4), 4-6, 7-5 என்ற கணக்கில் கார்சியாவை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    Next Story
    ×