search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரியல்மி GT Neo 3
    X
    ரியல்மி GT Neo 3

    150W சார்ஜிங் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - விற்பனை தேதி அறிவிப்பு!

    ரியல்மி நிறுவனம் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.


    ரியல்மி நிறுவனம் தனது GT Neo 3 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் புதிய ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போன் மே 4 ஆம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இந்த நிலையில், அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போனின் விற்பனை குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ரியல்மி நிறுவனம் GT Neo 3 ஸ்மார்ட்போனை கடந்த மாதமே சீன சந்தையில் அறிமுகம் செய்து விட்டது. அதன்படி இந்த மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5ஜி பிராசஸர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ரியல்மி GT Neo 3

    ரியல்மி ரியல்மி GT Neo 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரியல்மி GT Neo 3 அம்சங்கள், ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த மாடலில் 6.7 இன்ச் 2K டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 12GB LPDDR5 ரேம், 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என தெரிகிறது.

    இத்துடன் 50MP பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் என மூன்று சென்சார்கள் வழங்கப்படலாம். கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 150W சார்ஜிங் வசதி கொண்ட வேரியண்டில் 4500mAh பேட்டரியுடம், 80W சார்ஜிங் கொண்ட மாடலில் 5000mAh பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×