search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரெட்மி 10A
    X
    ரெட்மி 10A

    அசத்தல் அம்சங்களுடன் ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ரெட்மி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் இரண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி 10A மற்றும் ரெட்மி 10 பவர் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் ரெட்மி 10A ஸ்மார்ட்போன் சியோமி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட்ட புது வெர்ஷன் ஆகும். 

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 10A மாடலில் 6.53 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 IPS LCD டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G25 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 128GB இண்டர்னல் மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற ரெட்மி ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ரெட்மி 10A பட்ஜெட் விலை மாடலும் EVOL டிசைன் கொண்டிருக்கிறது. ரெட்மி 10A ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி 10A மாடல் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. 

     ரெட்மி 10 பவர்

    ரெட்மி 10 பவர் அம்சங்கள்:

    ரெட்மி 10A ஸ்மார்ட்போனை தொடர்ந்து சியோமி அறிமுகம் செய்து இருக்கும் ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனில், இதன் பெயருக்கு ஏற்றார் போல் சற்றே மேம்பட்ட அம்சங்களே வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ரெட்மி 10 பவர் மாடலில் 6.71 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20.6:9 டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் மற்றும் அட்ரினோ 610 GPU கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    மெமரியை பொருத்தவரை ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் 8GB LPDDR4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13 வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, f/1.8, 2MP டெப்த் சென்சார்,  f/2.4 மற்றும் 5MP செல்ஃபி கேமரா, f/2.2 வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக், 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 6000mAh பேட்டரி, 18 வாட் சார்ஜிங் உள்ளது. 

    இந்திய சந்தையில் புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக், சீ புளூ மர்றும் ஸ்லேட் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என்றும், 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் பவர் பிளாக் மற்றும் ஸ்போர்ட் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    Next Story
    ×