search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டெக்னோ கேமான் 17
    X
    டெக்னோ கேமான் 17

    48 எம்பி செல்பி கேமராவுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

    டெக்னோ நிறுவனத்தின் கேமான் 17 மற்றும் கேமான் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன.


    டெக்னோ நிறுவனத்தின் கேமான் 17 மற்றும் கேமான் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன. கேமான் 17 மாடலில் 6.6 இன்ச் HD+ 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், ஹீலியோ ஜி85 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. கேமான் 17 ப்ரோ மாடலில் 6.8 இன்ச் FHD+ 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    இரு மாடல்களிலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. கேமான் 17 மாடலில் 18 வாட் சார்ஜிங், கேமான் 17 ப்ரோ மாடலில் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

     டெக்னோ கேமான் 17 ப்ரோ

    டெக்னோ கேமான் 17 மாடலில் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, குவாட் எல்.இ.டி. பிளாஷ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    டெக்னோ கேமான் 17 ப்ரோ மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி போக்கே லென்ஸ், 2 எம்பி கேமரா மற்றும் 48 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.  
    Next Story
    ×