search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரிலையன்ஸ் ஜியோ
    X
    ரிலையன்ஸ் ஜியோ

    புதிதாக 2.5 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ

    இந்திய சந்தையில் மூன்றாம் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான மூன்றாவது காலாண்டில் மட்டும் 2.51 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்று இருக்கிறது.

    ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ உள்நாட்டில் வாய்ஸ் கால் சேவையை இலவசமாக வழங்க துவங்கியது. விதிகளில் தளர்வு மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்வு உள்ளிட்டவை புது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    டெலிகாம் சந்தையில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. 2020 ஆண்டு மட்டும் ஜியோ நிறுவனத்தில் சுமார் 4 கோடி பேர் இணைந்துள்ளனர். 

    இது டெலிகாம் துறையில் இதுவரை இல்லாத அளவு அதிகம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோவின் ARPU ரூ. 151 ஆக அதிகரித்து இருக்கிறது. ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.08 கோடியாக இருக்கிறது. ஜியோவின் டேட்டா பயன்பாடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 28.4 சதவீதம் அதிகம் ஆகும்.
    Next Story
    ×