search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி சி3
    X
    ரியல்மி சி3

    ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை மீண்டும் மாற்றம்

    ரியல்மி பிராண்டின் சி சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை இந்திய சந்தையில் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.


     
    ஸ்மார்ட்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே விலை உயர்த்தி ஒரு மாதம் மட்டுமே நிறைவுற்று இருக்கும் நிலையில், ரியல்மி சி2 மற்றும் ரியல்மி சி3 மாடல்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி ரியல்மி சி2 மற்றும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி சி2 2ஜிபி + 32 ஜிபி ரூ. 6499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் இது ரூ. 6999 ஆக மாறியிருக்கிறது. ரியல்மி சி2 2 ஜிபி + 16 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி மாடல்களின் விலை தற்சமயம் மாற்றப்படவில்லை.

    ரியல்மி சி2

    இதேபோன்று ரியல்மி சி3 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை முந்தைய ரூ. 7499 இல் இருந்து தற்சமயம் ரூ. 7999 என மாறியிருக்கிறது. இதன் 4 ஜிபி + 6 ஜிபி விலை ரூ. 8499 இல் இருந்து தற்சமயம் ரூ. 8999 ஆக மாறியுள்ளது. 

    ரியல்மி சி2 மற்றும் ரியல்மி சி3 உயர்த்தப்பட்ட புதிய விலை விவரங்கள் ரியல்மி வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் விரைவில் விலை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×