search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வோடபோன் லோகோ
    X
    வோடபோன் லோகோ

    ரூ. 129 சலுகையில் கூடுதல் டேட்டா வழங்கும் வோடபோன்

    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ. 129 சலுகையின் பலன்கள் மாற்றப்பட்டு, தற்சமயம் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.



    வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தனது ரூ. 129 விலை சலுகையை மாற்றி இருக்கிறது. அதன்படி ரூ. 129 சலுகையை ரீசார்ஜ் செய்வோருக்கு இனி 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 2 ஜி.பி. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது.

    புதிய மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் வோடபோனின் ரூ. 129 சலுகை ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 129 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ. 129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டாவினை 28 நாட்களுக்கு வழங்கி வருகிறது. ஏர்டெல் சலுகையிலும் டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.

    மொபைல் பயன்பாடு - கோப்புப்படம்

    வோடபோன் அறிவித்திருக்கும் புதிய மாற்றம் வோடபோன் சேவை கிடைக்கும் அனைத்து வட்டாரங்களுக்கும் பொருந்தும். முன்னதாக வோடபோனின் ரூ. 129 சலுகையில் பயனர்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் பயனர்களுக்கு 500 எம்.பி. டேட்டா கூடுதலாக கிடைக்கிறது.

    டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். பலன்களுடன் வோடபோன் பிளே செயலி மூலம் நேரலை டி.வி., திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×