search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்
    X

    வைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் வைபை வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. #Samsung



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து முழுமையாக மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் சாம்சங் தனது கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்களை பாங்காக்கில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்தியாவில் கேலக்ஸி ஏ70 அறிமுகமான நிகழ்வையொட்டி அந்நிறுவனம் இந்தியாவில் 40 நாட்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததாக அறிவித்தது. சாம்சங் ஏற்கனவே கேலக்ஸி ஏ10, கேல்கஸி ஏ20, கேலக்ஸி ஏ20இ, கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ40, கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ60, கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. 

    இந்நிலையில், இதே சீரிசில் சாம்சங் மற்றொரு ஸ்மார்ட்போனை இணைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் விலை குறைந்த மாடலை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10இ என்ற பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.



    முன்னதாக கேலக்ஸி ஏ20 மற்றும் கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சாம்சங் SM-A102U என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போனிற்கு வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10இ என்ற பெயரில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

    வைபை அலையன்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இதில் டூயல் பேண்ட் வைபை 802.11 a/b/g/n/ac வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் டூயல் பேண்ட் வசதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதனால் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் வேறு சிப்செட் வழங்கப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7884 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் சிறிய டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884 சிப்செட், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×