என் மலர்

  தொழில்நுட்பம்

  ஆண்டு இறுதியில் இந்தியா வரும் 5ஜி சிப்செட்
  X

  ஆண்டு இறுதியில் இந்தியா வரும் 5ஜி சிப்செட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீடியாடெக் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்களை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது. #Mediatek  சீனாவில் நடைபெற்ற சைனா மொபைல் சர்வதேச கூட்டணி கருத்தரங்கில் மீடியாடெக் நிறுவனம் தனது முதல் 5ஜி சிப்செட்டை அறிமுகம் செய்தது. மீடியாடெக் நிறுவனத்தின் முதல் 5ஜி சிப்செட் ஹீலியோ M70 என அழைக்கப்படுகிறது.

  மீடியாடெக் ஹீலியோ M70 சிப்செட் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு கொண்டு வரயிருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கும் என தெரிவித்துள்ளது. உலகின் முதல் 5ஜி மல்டி-மோட் சிப்செட்களில் ஹீலியோ M70 ஒன்றாக இருக்கிறது.

  5ஜி சேவையில் மீடியாடெக் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்செட்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. எனினும், சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.  3ஜி மற்றும் 4ஜி சாதனங்களில் மீடியாடெக் சிப்களை வழங்க மீடியாடெக் நிறுவனம் கைஓ.எஸ். டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. கைஓ.எஸ். இயங்குதளம் மீடியாடெக் 3ஜி MT6572 மற்றும் மீடியாடெக் MT6731 உள்ளிட்டவற்றில் இயங்கும். இது மொபைல் போன்களில் டூயல் 4ஜி சிம் பயன்படுத்த வழி செய்யும்.

  இந்த சிப்செட் கொண்டு இயங்கும் முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டின இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு முதல் மீடியாடெக் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
  Next Story
  ×