என் மலர்

  தொழில்நுட்பம்

  ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்
  X

  ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை விவரம் வெளியாகியிருக்கிறது. #MateX  மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு டிரெண்டிங் சாதனமாக பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமானது முதல் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிட துவங்கின.

  சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடலுடன் அறிமுகம் செய்தது. சாம்சங்கை தொடர்ந்து ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.  சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு போன்று ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது. தற்சமயம் கிஸ்மோசைனா வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீட்டை ஹூவாய் நிறுவனம் முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அந்த வகையில் ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் வெளியிடலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்திற்கு முன்பே விற்பனைக்கு வருகிறது. ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடு பற்றிய விவரங்கள் அந்நிறுவன ஆன்லைன் ஸ்டோரில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது.

  எனினும், ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2,580 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஃபோல்டு விலை 1980 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×