என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டில் மாற்றம்
Byமாலை மலர்12 Feb 2019 10:48 AM GMT (Updated: 12 Feb 2019 10:48 AM GMT)
ரெட்மி பிராண்டு புதிய நோட் 7 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #RedmiNote7 #Smartphone
இந்தியாவில் அறிமுகமாகும் முன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிரபலமாகி வருகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இம்மாதமே இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியான நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமியின் முதல் 48 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 இருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி கோ மாடல்களும் அறிமுகமாகும் என தெரிகிறது. ரெட்மி நோட் 7 இந்திய வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படும் நிலையிலும், சியோமியின் மனு குமார் ஜெயின் தொடர்ந்து ரெட்மி நோட் 7 டீசர்களை வெளியிட்டு வருகிறார்.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல், வாட்டர் டிராப் ரக நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி வசதி கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் போர்டிரெயிட் மோட் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங் எம் சீரிஸ் போன்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது. இத்துடன் அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனும் போட்டியாக இருக்கும்.
Next Story
×