search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு
    X

    இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. #Nokia6Plus #Smartphones



    இந்தியாவில் நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக ஹெச்.எம்.டி. குளோபல் அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி நோக்கியா 3.1 விலை தற்சமயம் ரூ.8,999 ஆகவும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 என மாறியுள்ளது.

    முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் தனது நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்தது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.11,999 விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது.

    நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 சிப்செட், 13 எம்.பி. பிரைமரிு கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.



    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமான நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.16,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1,500 விலை குறைக்கப்பட்டது.

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x1920 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி. பேனல், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. #Nokia6Plus #Smartphones
    Next Story
    ×