search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ப்ளூடூத் சான்று பெற்ற சாம்சங் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்
    X

    ப்ளூடூத் சான்று பெற்ற சாம்சங் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட் சாதனங்களுக்கு ப்ளூடூத் சான்றளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Smartwatch



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிட்னஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிட் சாதனம் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் அன்பேக்டு விழாவில் அந்நிறுவனம் கியர் ஐகான் எக்ஸ் (2018) மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக கேலக்ஸி பட்ஸ் சாதனமும் அறிமுகமாகலாம்.

    கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள் ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் SM-R170 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஐகான் எக்ஸ் (2018) மாடலில் ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டிருந்தது.



    இதுதவிர புதிய இயர்போனில் 4 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய கியர் ஐகான் எக்ஸ் (2018) மாடலை போன்றே புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போனிலும் புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி ஃபிட் சாதனத்தின் அம்சங்கள் சாம்மொபைல் வலைதளம் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி ஃபிட் சாதனம் SM-R370 மற்றும் SM-R375 மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இருசாதனங்களிலும் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. மேலும் இவை கேலக்ஸி ஃபிட் என்ற பெயர் கொண்டிருக்கிறது.

    புதிய சாதனத்தில் இசிம் வசதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சாம்சங் நிறுவனம் ஐந்து கேலக்ஸி எஸ்10 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் 5ஜி வேரியன்ட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அடங்கும். இவற்றுடன் கேலக்ஸி ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறி்முகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×