search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    இணையத்தில் லீக் ஆன இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #nokiamobile #smartphone



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. வரும் நாட்களில் ஹெச்.எம்.டி. குளோபல் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9, டிஸ்ப்ளேவில் துளை கொண்ட நோக்கியா 8.1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. நோக்கியா 8.1 பிளஸ் போன்றே நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனிலும் டிஸ்ப்ளேவினுள் கேமரா வழங்கப்படுகிறது.



    நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம் என இருவித வேரியன்ட்களில் வெளியாக இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் லென்ஸ், OZO ஆடியோ வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    ஆண்ட்ராய்டு ஒன் சாதனமாக வெளியாகும் நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனின் விவரங்கள் முதல் முறையாக வெளியாகி இருக்கிறது. வெளியீட்டை பொருத்த வரை சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்தில் நடைபெறலாம் என தெரிகிறது.

    முன்னதாக ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப்பட்டு, கூடுதலாக தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டது. 
    Next Story
    ×