என் மலர்
தொழில்நுட்பம்

விரைவில் இந்தியா வரும் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Micromax #smartphone
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் டிஸ்ப்ளே நாட்ச் கொண்ட புது ஸ்மார்ட்போனினை டிசம்பர் 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை மைக்ரோமேக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருந்த நிலையில், இடையே ஸ்மார்ட்போன் சந்தையில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு பின் தீபாவளி சமயத்தில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அக்டோபர் மாதத்தில் அந்நிறுவனம் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன், பாரத் 4 தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது.
We are excited, the countdown has begun. #AboveTheRestpic.twitter.com/Egtv7oeeUM
— Micromax India (@Micromax_Mobile) December 12, 2018
புது ஸ்மார்ட்போனின் டீசரை பொருத்தவரை மைக்ரோமேக்ஸ் மாடலில் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளே நாட்ச் வடிவமைப்பு முதன்முறையாக ஐபோன் X மாடலில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்திய ஒப்போ ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே நாட்ச் வழங்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் நாட்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனாக இது அமைகிறது. புது ஸ்மார்ட்போனின் டீசருடன் "Does the powerful excite you?" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் சக்திவாயந்த பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், மைக்ரோமேக்ஸ் புதுவித விளம்பர யுக்திகளை பார்க்கும் போது, அந்நிறுவனம் மெல்ல சந்தையில் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது. #AboveTheRest
Next Story






