search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    12 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்
    X

    12 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 12 ஜி.பி. டேட்டா, அதிகபட்சம் 1000 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. #GalaxyS10 #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் 5ஜி வேரியன்ட் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    5ஜி வேரியன்ட் ஸ்மார்ட்போன் பியான்ட் எக்ஸ் என அழைக்கப்படும் என்றும் இதில் அதிகபட்சம் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் ஆறு கேமராக்கள் வழங்கப்படும் என்றும் கேலக்ஸி எஸ்10 டாப்-என்ட் ஸ்மார்ட்போன் மற்ற மூன்று மாடல்களுடன் பிப்ரவரி 2018இல் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் 5ஜி வேரியன்ட், 5ஜி நெட்வொர்க் பொதுப்படியாக வெளியாகும் போது வெளியிடப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வைட், பிளாக், எல்லோ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் சில மாடல்களில் கிரேடியன்ட் நிற ஆப்ஷனும் கொண்டிருக்கலாம்.

    இதேபோன்று செராமிக் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பயனர்களுக்கு அதிசிறப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கில் எசென்ஷியல் போன் மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை செராமிக் மூலம் உருவாக்க துவங்கிவிட்டன.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களை SM-G973 மற்றும் SM-G975 என இருவித வேரியன்ட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.44 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் 5.8 இன்ச் வேரியன்ட் இரண்டு பிரைமரி கேமராக்களையும், 6.44 இன்ச் மாடல் மூன்று பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களையும், இரண்டு செல்ஃபி கேமரா லென்ஸ் என மொத்தம் ஆறு கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 

    இதனுடன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி மூலம் பயனர்கள் தங்களது வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சாதனங்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

    மேலும் புதிய கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. #GalaxyS10 #smartphone
    Next Story
    ×