search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் விவோ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    இந்தியாவில் விவோ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #VivoY95



    விவோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ வை95 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 12என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 5.0 கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் மற்றும் ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ வை95 ஸ்மார்ட்போனில் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வை95 சிறப்பம்சங்கள்:

    - 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் வசதி
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    விவோ வை95 ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படும் விவோ வை95 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×