search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டூயல் செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்
    X

    டூயல் செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பது புதிய டீசரில் தெரியவந்துள்ளது. #MiMIX3



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 25ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகியுள்ளது.

    அந்த வகையில் சமீபத்தில் வெளியான டீசரில் புதிய Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 24 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் செல்ஃபி-லைட், மேனுவல் கேமரா ஸ்லைடர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் Mi மிக்ஸ் 3 மாடலில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

    புதிய தகவல்கள் சியோமி அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுன்ட்டில் தெரியவந்தது, பின் இதே தகவல் அந்நிறுவன ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மற்றொரு டீசரில் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் 5ஜி கனெக்டிவிட்டி, 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.

    அந்த வகையில் அதிகளவு ரேம் வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மாப்ட்போன் என்ற பெருமையை பெற முடியும். மற்றொரு வெய்போ பதிவில் சியோமி Mi மிக்ஸ் 3 லைவ் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது சியோமி வெளியிட்ட டீசரில் உள்ள ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப் போகிறது. 



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி சியோமி Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 3D ஃபேஸ் அன்லாக் வசதி, பெரிய FHD + AMOLED டிஸ்ப்ளே, 90% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஏ.ஐ. டூயல் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்ட மாடல் ஸ்பெஷல் எடிஷன் வடிவில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட Mi 8 ஸ்மார்ட்போன் எக்ஸ்புளோரர் எடிஷன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி இடம்பெற்றிருக்கும் என சியோமி முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் தெரியவந்தது. தற்சமயம் சியோமி நிறுவனம் 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் வரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×