என் மலர்

  தொழில்நுட்பம்

  இந்திய விற்பனையில் சியோமி புதிய மைல்கல் சாதனை
  X

  இந்திய விற்பனையில் சியோமி புதிய மைல்கல் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமி இந்தியா நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்து இருக்கிறது. #Xiaomi  சியோமி நிறுவனம் இந்தியாவில் ஒரு கோடி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி 9 மாதங்களில் இந்த மைல்கல் சாதனையை சியோமி படைத்திருக்கிறது. 

  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் விற்பனை டிசம்பர் மாதத்தில் துவங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 50 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது.   விற்பனை துவங்கிய குறுகிய காலக்கட்டத்தில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ஸ்மார்ட்போன் ரெட்மி 5ஏ தான் என சியோமி அறிவித்துள்ளது.

  மேலும் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஒரே ஸ்மார்ட்போனாக ரெட்மி 5ஏ இருப்பதாகவும், தொடர்ந்து 9 மாதங்களாக இந்த நிலையை சியோமி தக்கவைத்துக் கொண்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  ரெட்மி 5ஏ சிறப்பம்சங்கள்:

  - 5.0 இன்ச் ஹெச்.டி. 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே
  - குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
  - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
  - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
  - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
  - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
  - ஆன்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9

  சியோமி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  Next Story
  ×