search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பிளாக்பெரி எவால்வ் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்
    X

    பிளாக்பெரி எவால்வ் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்

    ஆப்டிமஸ் நிறுவனத்தின் பிளாக்பெரி எவால்வ் ஸ்மார்ட்போன் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BlackBerry



    ஆப்டிமஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன்களை ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்தது.

    பிளாக்பெரி எவால்வ் மற்றும் எவால்வ் X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் எவால்வ் X ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத இறுதியில் விற்பனை செய்யப்பட்டது. பிளாக்பெரி எவால்வ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வி்ற்பனை சற்று தாமதமானது. 

    இந்நிலையில், பிளாக்பெரி எவால்வ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளாக்பெரி எவால்வ் விலை ரூ.24,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

    புதிய எவால்வ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக, 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் DTEK ஆப் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 

    அழகிய செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எவால்வ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், டூயல் 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் சாஃப்ட் டச் பேக் பேனல், கிரேடு 7 அலுமினியம் ஃபிரேம், கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    பிளாக்பெரி எவால்வ் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - எவால்வ் - 13 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்,சாம்சங் S5K3L8 சென்சார்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங் 

    இந்தியாவில் எவால்வ் X ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிளாக்பெரி எவால்வ் ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.3,950 கேஷ்பேக் மற்றும் மாத தவணை முறைகளில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. #BlackBerry #smartphone
    Next Story
    ×