search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

    சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஒரு வாரம் முன்னதாகவே கண்டறிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. #ArtificialIntelligence



    சென்னையில் 2015 டிசம்பர் கனமழையின் போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. யாரும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பெருமளவு சேதத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. 

    இந்நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. 

    சென்னை வெள்ள அபாய அமைப்பு (C-Flows அல்லது Chennai Flood Warning System) என அழைக்கப்படும் புதிய வழிமுறையை கொண்டு வெள்ள அபாயங்களை அதிகபட்சம் ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிந்து கொள்ள முடியும். கடலோர ஆய்வுக்கான தேசிய மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த வழிமுறை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், அதற்கு ஏற்றவாரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் செய்து கொள்ள முடியும். எண்ணியல் அடிப்படையில் புவியியல் தகவல் முறைமை எனும் அமைப்பு மூலம் இயங்கும் இந்த வழிமுறை வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பதை பகுதி, தெரு மற்றும் குறிப்பிட்ட கட்டிடம் வரை மிகத்துல்லியமாக கணிப்பதோடு, அங்கிருந்து வெளியேறுவதற்கான வழியையும் காண்பிக்கும்.


    கோப்பு படம்

    இந்த வழிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு வானிலை, கடல் சீற்ற கணிப்பு உள்பட பல்வேறு இதர விவரங்களை கொண்டு வெள்ள பாதிப்புகளை கணிக்கின்றனர். தேவையான விவரங்களை வழங்கிய 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கிவிடும். 

    வெள்ள பாதிப்பு ஏற்பட இருப்பது குறித்த முடிவுகள் மேப்கள், எழுத்துக்கள் அல்லது நம்பர்கள் வடிவிலோ அல்லது 3D எனப்படும் முப்பறிமான முறையிலும் வழங்கப்படும். இதனால் வெள்ள பாதிப்பு சார்ந்த விவரங்களை மிகத்தெளிவாக முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

     "இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது, வரவிருக்கும் வடகிழக்கு பருவத்தில் இத்திட்டம் சோதனை செய்யப்படும்," என கடலோர ஆய்வுக்கான தேசிய மையத்தின் தலைவர் எம்.வி. ரமனமூர்த்தி தெரிவித்தார்.
    Next Story
    ×