என் மலர்

  தொழில்நுட்பம்

  சென்னையில் ஹானர் 9N ஸ்மார்ட்போன் அறிமுக செய்த ஓவியா
  X

  சென்னையில் ஹானர் 9N ஸ்மார்ட்போன் அறிமுக செய்த ஓவியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் முதன்முறையாக ஹானர் 9N ஸ்மார்ட்போனினை பிரபல ஸ்மார்ட்போன் விற்பனையாளரான பூர்விகா மொபைல்ஸ் பிரத்யேகமாக அறிமுகம் செய்தது. #Honor9N #Poorvika


  இந்தியாவின் முன்னணி மொபைல் விற்பனையாளரான பூர்விகா மொபைல்ஸ் தமிழகத்தில் முதன்முறையாக ஹானர் 9N ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் விற்பனையகத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் பிரபல நடிகை ஓவியா புத்தம் புதிய ஹானர் 9N ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தார்.

  அறிமுக நிகழ்வில் பூர்விகா மொபைல்ஸ் செயல் அதிகாரி யுவராஜ், பூர்விகா நிறுவன நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ், ஹூவாய் நிறுவன ஆஃப்லைன் விற்பனை இயக்குனர் யுன்லி, ஹூவாய் நிறுவனத்தின் பிராந்திய விற்பனைப்பிரிவு தலைமை அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  "பூர்விகா மொபைல்ஸ்-இல் ஹானர் 9N ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வது ஆனந்தத்தை வழங்குகிறது. எங்களது ஒவ்வொரு செயலிலும் வாடிக்கையாளர்களின் அனுபவம் தான் மையமாக இருக்கிறது. நுகர்வோரின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஹானர் 9N இருக்கும் என நம்புகிறோம், இதற்கு இதில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியே காரணம்," என பூர்விகா நிறுவன தலைமை செயல் அதிகாரி யுவராஜ் தெரிவித்தார்.

  புதிய ஹானர் 9N ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் 19:9 நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, கிரின் 659 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.  ஹானர் 9N சிறப்பம்சங்கள்:

  - 5.84 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  - ஆக்டா-கோர் கிரின் 659 சிப்செட்
  - மாலி T830-MP2 GPU
  - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
  - 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
  - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
  - 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
  - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
  - 16 எம்பி செல்ஃபி கேமரா
  - கைரேகை சென்சார்
  - ரைட் மோட், பார்டி மோட்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  இந்தியாவில் ஹானர் 9N ஸ்மார்ட்போன் லாவென்டர் பர்ப்பிள், ராபின் எக் புளு, சஃபையர் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியன்ட் விலை ரூ.11,999, 4 ஜிபி ரேம் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.13,999 மற்றும் 128 ஜிபி வேரியன்ட் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Honor9N #Poorvika

  சென்னையில் ஹானர் 9N அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,


  Next Story
  ×